அரசு போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா

மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தேவையான டூல்ஸ், உதிரிபாகங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு கிளைச்செயலாளர் செந்தில்குமார் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது.

Update: 2022-12-19 20:23 GMT


மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தேவையான டூல்ஸ், உதிரிபாகங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு கிளைச்செயலாளர் செந்தில்குமார் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது. இதில் மதுரை அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் அழகர்சாமி கூறும் போது, மதுரை அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பணி செய்வதற்கான உபகரணங்கள் வழங்கப்படாத நிலை நீடிக்கின்றது. இப்போதும் மதுரை மண்டலத்தில் சுமார் 90 சதவீதம் பஸ்கள் 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட பஸ்களாக உள்ளன. எனவே பழைய உதிரிபாகத்தை ஒரு வண்டியில் இருந்து கழட்டி வேறு வண்டியில் மாற்றுவதன் மூலமாகவே அந்த உதிரி பாகம் மீண்டும் பழுதாகும் சூழ்நிலை ஏற்படுகின்றது என்றார். இந்த போராட்டத்தை மதுரை சங்க பொதுச் செயலாளர் கனகசுந்தர் தொடங்கி வைத்து பேசினார். சி.ஐ.டி.யு. மாவட்டச்செயலாளர் லெனின் வாழ்த்தி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்