கல்வி தரத்தை உயர்த்துவது குறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம்
கல்வி தரத்தை உயர்த்துவது குறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது.
நாகர்கோவில்,
கல்வி தரத்தை உயர்த்துவது குறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது.
ஆசிரியர்கள் கூட்டம்
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தினை உயர்த்துவது குறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவது, அதன் மூலம் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.