வாலிபருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

வாலிபருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Update: 2022-08-26 12:00 GMT

கோவை

கோவையில் நடந்த விபத்து வழக்கில் வாலிபருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

இழப்பீடு வழங்கவில்லை

திருச்சியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 26). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்தநி லையில் அவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சுந்தராபுரம் அருகே உள்ள எல்.ஐ.சி. காலனி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது.

இந்த வழக்கில் படுகாயம் அடைந்த ராம்குமாருக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. எனவே அவர் தனக்கு இழப்பீடு கேட்டு கோவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராம்குமாருக்கு, அரசு போக்குவரத்து கழகம் ரூ.20 லட்சத்து 9 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். ஆனால் அவருக்கு இழப்பீடு வழங்கவில்லை.

அரசு பஸ் ஜப்தி

இதையடுத்து ராம்குமார் சார்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி வட்டியுடன் சேர்த்து ராம்குமாருக்கு இழப்பீடாக ரூ.28 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் கோர்ட்டு உத்தரவின்படி அவருக்கு இழப்பீடு வழங்கவில்லை.

இதை தொடர்ந்து அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்று கோவையில் இருந்து சேலத்துக்கு சென்ற குளிர்சாதன வசதி கொண்ட அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதில் மனுதாரர் தரப்பில் வக்கீல் நவமணி ராசு ஆஜராகி வாதாடினார்.


Tags:    

மேலும் செய்திகள்