காட்டு பன்றி தாக்கி அரசு கல்லூரி மாணவர் படுகாயம்
காட்டு பன்றி தாக்கி அரசு கல்லூரி மாணவர் படுகாயம்
குலசேகரம்:
குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பெருவழிக்கடவு பகுதியை சேர்ந்தவர் அருள்குமார் (வயது18). இவர் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். அருள்குமார் கல்லூரிக்கு செல்வதற்கு முன்பு அதிகாலையிலேயே எழுந்து ரப்பர் பால் வடிப்பு பணிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சுருளகோடு உள்ளிமலை பகுதியிலுள்ள ரப்பர் தோட்டத்திற்கு பால் வடிக்க சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென காட்டுப்பன்றி கூட்டம் சாலையின் குறுக்கே புகுந்து அருள்குமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பாய்ந்தது. இதில் கீழே விழுந்த அருள்குமாரை காட்டு பன்றி கூட்டம் சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அருள்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரப்பர் பால் வடிப்பு பணிக்கு சென்ற கல்லூரி மாணவரை காட்டு பன்றி தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.