மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; வாலிபர் சாவு
மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; வாலிபர் சாவு
காங்கயம்
ஈரோடு மாவட்டம் வடபழனி குமரன் நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் கவுதம் (வயது 22). லாரி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் காங்கயத்தில் இருந்து அரச்சலூர் நோக்கி பழையகோட்டை சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது நாட்டார்பாளையம் பாப்பினி பிரிவு அருகே சென்றபோது எதிர் திசையில் ஈரோட்டில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த அரசு பஸ் கவுதம் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் கவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அரசு பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.