பேராவூரணியில் இருந்து திருப்பதிக்கு அரசு பஸ்
பேராவூரணியில் இருந்து திருப்பதிக்கு அரசு பஸ்
பேராவூரணியில் இருந்து திருப்பதிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என போக்குவரத்து மானிய கோரிக்கையில் அசோக்குமார் எம்.எல்.ஏ. போக்குவரத்து துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் சிவசங்கர் பேராவூரணிலிருந்து திருப்பதிக்கு பஸ் இயக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து பேராவூரணியில் இருந்து திருப்பதிக்கு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் பஸ் இயக்கப்பட்டது. இதனை அசோக்குமார் எம்.எல்.ஏ. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் விரைவு போக்குவரத்து கழக திருச்சி கோட்ட மேலாளர் முருகேசன், கும்பகோணம் கிளை மேலாளர் சேகர், அரசு போக்குவரத்துக் கழக பேராவூரணி கிளை மேலாளர் மகாலிங்கம் மற்றும் பேராவூரணி தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், சேதுபாவாசத்திரம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.