கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா
கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில், கல்லூரி நிறுவனர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் நலத் திருவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியை ஸ்ரீமதி சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் இளைஞர் நல மன்றம் சார்பாக இளைஞர் நலத் திருவிழா சிறப்பாக நடந்தது. விழாவில் பேராசிரியர்களும், அலுவலக ஊழியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வரின் வழிகாட்டுதலின்படி இளைஞர் நல மன்ற பொறுப்பாசிரியர் கலைச்செல்வி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.