கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பினார்

5 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து ஊட்டியில் இருந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சென்னைக்கு திரும்பினார்.

Update: 2022-06-09 14:04 GMT

ஊட்டி

5 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து ஊட்டியில் இருந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சென்னைக்கு திரும்பினார்.

கவர்னர் வருகை

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரும், பழங்குடியின தலைவருமான பிர்சா முண்டாவின் 122-வது நினைவு நாளையொட்டி, ராஜ் பவன் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிர்சா முண்டாவின் உருவப்படத்திற்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் கவர்னரின் மனைவி லட்சுமி ரவி, கலெக்டர் அம்ரித் மற்றும் பழங்குடியினர் ஏகலைவா பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு அவர்களும் பிர்சா முண்டாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

சென்னை திரும்பினார்

இதன் பின்னர் 5 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து காலை 11.30 மணி அளவில் ஊட்டியில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து 3.15 மணியளிவில் விமானம் மூலம் சென்னைக்கு சென்றார். அவரை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் கல்பனா, ஆணையாளர் பிரதாப் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

இதையொட்டி கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்