ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் - விஜயகாந்த் வரவேற்பு

ஆன்லைன் ரம்மி சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-10 13:46 GMT

சென்னை,

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள அறிக்கையில்,

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் ரம்மிக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் தேமுதிக சார்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டு வந்தன. இதையடுத்து கடந்தாண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பிலும் எழுந்த கடும் எதிர்ப்புகள் காரணமாக தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தடுக்கப்படும். அந்த மசோதாவுக்கு காலம் தாழ்த்தாமல் முன்கூட்டியே ஒப்புதல் வழங்கியிருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். காலம் தாழ்த்தினாலும் தற்போதாவது ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதை வரவேற்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்