பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் அலட்சியமாக செயல்படும் அரசு டவுன்பஸ் டிரைவர்கள்

பஸ் நிறுத்தங்களில் மாணவிகள் காத்திருக்கும்போது இலவச பயணம் என அலட்சியமாக கருதி அவர்களை ஏற்றாமல் டிரைவர்கள் அலட்சியமாக பஸ்களை இயக்குவதால் மாணவிகள் கடுமையாக அவதிப்பட நேரிடுகிறது. எனவே அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-24 18:23 GMT

அணைக்கட்டு

பஸ் நிறுத்தங்களில் மாணவிகள் காத்திருக்கும்போது இலவச பயணம் என அலட்சியமாக கருதி அவர்களை ஏற்றாமல் டிரைவர்கள் அலட்சியமாக பஸ்களை இயக்குவதால் மாணவிகள் கடுமையாக அவதிப்பட நேரிடுகிறது. எனவே அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பெண்கள் பள்ளி

வேலூர் மாவட்டம் பொய்கையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்று வட்டாரத்தில் உள்ள 1100 மாணவிகள் படித்து வருகின்றனர்.

மாணவிகள் சைக்கிள்களிலும் அரசு டவுன் பஸ் களிலும் பள்ளிக்கு வருகின்றனர்.

அந்த வழியாக செல்லும் அரசு டவுன் பஸ்கள் குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சுமார் 100 மீட்டர் தொலைவில் நிறுத்திவிட்டு பயணிகளை இறக்கி விட்டு மாணவிகளை ஏற்றாமல் நேராக சென்று விடுகின்றனர்.

இதனால் மாணவிகள் குறித்த நேரத்திற்கு வீட்டுக்கு செல்ல முடியாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பெற்றோர்களும் பொதுமக்களும் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாகவும் புகாராகவும் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலைதான் பல்வேறு ஊர்களில் உள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பள்ளிமுடிந்தவுடன் வீட்டிற்கு திரும்ப 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் பொய்கை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ் ஒன்று 100 மீட்டர் தூரத்துக்கு முன்பே நிறுத்தி பயணிகளை மட்டும் இறக்கிவிட்டு இலவச பயண அட்டைதானே என அலட்சியமாக கருதி மாணவிகளை ஏற்றாமல் டிரைவர் பஸ்சை நகர்த்தினார்.

இதைபார்த்த பள்ளி மாணவிகள் பஸ் புறப்பட்டு விட்டதே என்ற ஆதங்கத்தில் சர்வீஸ் சாலையில் எதிரே வாகனங்கள் வருவதை கூட கவனிக்காமல் ஓடோடி பஸ்ஸில் பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டது.

தவிப்பு

பல மாணவிகள் ஓடும்போதே பஸ்ஸில் ஏற முடியாமல் தவித்து நின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளி தேநரங்களில் மாணவிகள் பஸ் ஏற காத்திருக்கும் பஸ் நிறுத்தங்களை கண்காணிக்கசெய்து டிரைவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி மாணவிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனை பொருட்படுத்தாத டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்