ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-22 18:39 GMT

திருவாரூர்;

நகராட்சி ஊழியர்களை தனியார் மயமாக்கும் அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும், நகராட்சி நிர்வாகத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரபடுத்த வேண்டும். மேல்நிலை நீர் தேக்க தொட்டி தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணி காவலர்களை நிரந்தரப்படுத்தி ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சி.ஜ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்்கையை வலியுறுத்தி பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்