அரசு ரப்பர் கழக தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

அருமனை அருகே அரசு ரப்பர் கழக ஒப்பந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-23 18:45 GMT

அருமனை:

அருமனை அருகே அரசு ரப்பர் கழக ஒப்பந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஒப்பந்த தொழிலாளி

அருமனை அருகே உள்ள சிற்றாறு சிலோன் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(வயது56). இவர் அரசு ரப்பர் கழகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சுப்பிரமணியமும், அவருடைய மனைவியும் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். மேலும், கடன்தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் சென்ற சுப்பிரமணியம் அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.

பிணமாக மீட்பு

இந்த நிலையில் வீட்டின் அருகில் உள்ள வனப்பகுதியில் சுப்பிரமணியம் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி கடையால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுப்பிரமணியம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சுப்பிரமணியம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்