ஆட்சி முடியும் வரை தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது - ஜி.கே.வாசன்

இந்த ஆட்சி முடியும் வரையிலாவது மின் கட்டண உயர்வு குறித்த பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Update: 2023-06-08 09:24 GMT

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு, மின் கட்டணத்தை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம் என்பது தான் தமிழக மக்களின் கோரிக்கையாகும். நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஜூலை 1 முதல் 4.70 சத வீதம் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், தொடர்ந்து பல ஆண்டுகளாக முழு அளவிலான மின் கட்டண திருத்தத்தை காண உள்ளதும் ஏற்புடையதல்ல. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் சிரமத்தில் இருக்கும் பொது மக்களுக்கு மின் கட்டணம் உயர்ந்தால் பெரும் சுமையாக இருக்கும். அரசுக்கும் மக்களின் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்து வரும் வேளையில் மின் கட்டண உயர்வு நியாயமில்லை. எனவே தமிழக அரசு, இந்த ஆட்சி முடியும் வரையிலாவது மின் கட்டண உயர்வு குறித்த பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்