அரசு ஊழியர் சங்கத்தினர் வாகன பிரசாரம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-20 14:33 GMT

கோத்தகிரி, 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் முன் வாகன பிரசாரம் நடைபெற்றது. இதற்கு சங்க மாநில துணை தலைவர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட தலைவர் சலீம், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். பிரசாரத்தின் போத புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும். சாலை பணியாளர்களின் பணி நீக்க காலத்தை பணிவரன்முறை செய்ய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4½ லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்