அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
திருச்சி, மே.29-
திருச்சி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் பாபு வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பெரியசாமி தொடக்கவுரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் பழனிசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு. செயலாளர் ரெங்கராஜன் உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தில். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட உரிமைகளை உடனே வழங்கவேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி.செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில தலைவர் பன்னீர்செல்வம் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.