நெல்லையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-27 20:36 GMT

நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த தமிழ்நாடு அரசு அலுவலர்கள் பணி பாதுகாப்பு குழுவினர் நேற்று மாலையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க தலைவர் துரைப்பாண்டி, கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் மணிகண்டன், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில துணை தலைவர் சுப்பு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அதற்கு நீதி கேட்டு தமிழக அரசை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதில் அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்