தியாகதுருகத்தில்அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தியாகதுருகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-03-23 00:15 IST

தியாகதுருகம், 

தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து எவ்வித அறிவிப்பும் செய்யப்படாததை கண்டித்து தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் தயாபரன், ஜெகதீசன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் பழனிவேல், வட்டார செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் வீரமணி வரவேற்றார். ஒன்றிய பொறியாளர் ஜெயபிரகாஷ் கண்டன உரையாற்றினார். இதில் ஒன்றிய பொறியாளர் கோபி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், மஞ்சமுத்து, ஊராட்சி செயலாளர் முத்துவேல், சத்துணவு ஊழியர் சங்க வட்டார தலைவர் முத்துலட்சுமி, வட்டார செயலாளர் சரவணன், பொது சுகாதார மாவட்டத் தலைவர் சீனிவாசன், பணி மேற்பார்வையாளர் சீனிவாசன், உதவியாளர் சங்கீதா உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். முடிவில் வட்டார உறுப்பினர் இனியவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்