அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகிரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
சிவகிரி:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ மாநாட்டின் முடிவின்படி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சிவகிரி தாலுகாஅலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிவகிரி வட்ட கிளைத்தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் மாடசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் சேகர், சண்முகம், ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சித்துறை மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். சிவகிரி தாசில்தார் செல்வக்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வட்டக்கிளை நிர்வாகி அழகராஜா, வருவாய்த்துறை, நிலஅளவைத்துறை மற்றும் கருவூலத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். அகவிலைப்படி உயர்வு, சரண்டர் விடுப்பு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
முடிவில் வட்டக்கிளை தலைவர் முருகன் நன்றி கூறினார்.