அரசு கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
அரசு கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ராஜாராம் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் மனோகரன், மதியரசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, மாணவ- மாணவிகள் பெற்ற கல்வியை எவ்வாறு சமூகத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பேசினார். முடிவில் வணிகவியல் துறை தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார். இதில் அனைத்துத்துறை இளங்கலை முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.