அரசு பஸ்-வேன் மோதல்; 12 பேர் படுகாயம்

சத்தியமங்கலம் அருகே அரசு பஸ்-வேன் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-07-05 21:14 GMT

சத்தியமங்கலம் அருகே அரசு பஸ்-வேன் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

பஸ்-வேன் மோதல்

புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று காலை சென்றுகொண்டு இருந்தது. பெரியூர் என்ற இடம் வரும்போது ஒரு வளைவில் பஸ் திரும்பியது. அப்போது எதிரே திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் வேனும், பஸ்சும் மோதிக்கொண்டன.

விபத்து நடந்தபோது பஸ் மற்றும் வேனில் பயணம் செய்தவர்கள் அய்யோ, அம்மா என்று அலறினார்கள்.

12 பேர் படுகாயம்

இந்தவிபத்தில் பஸ் டிரைவர் சத்தியமங்கலத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 43), தனியார் பனியன் கம்பெனி வேன் டிரைவர் நம்பியூரை சேர்ந்த வெள்ளியங்கிரி (39), பஸ் மற்றும் வேனில் பயணம் செய்த ரங்கம்மாள் (70), கந்தசாமி (48), அருள் (50), வளர்மதி (42), தேவி (43) தனலட்சுமி (43), சரசா (35) ஆகியோர் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்