அரசு பஸ் டிரைவர் தற்கொலை
சிவகிரி அருகே அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள தென்மலை கண்மாய்பட்டித் தெருவைச் சேர்ந்த சாமி மகன் கணேசன் (வயது 37). இவர் அரசு பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி வீரலட்சுமி. தென்மலை சத்துணவுக்கூடத்தில் அங்கன்வாடி பணியாளராக உள்ளார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணேசன் ஒரு மாத காலமாக சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனை மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த கணேசன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.