அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
நாகையில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 5 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரசு பஸ் கண்டக்டர்
நாகை புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். சரவணன் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் திருமணத்திற்காக வெளியூர் சென்றார்.
பின்னர் அவர் கடந்த 13-ந்தேதி சரவணன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது டி.வி.யை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 5 பவுன் நகையையும் காணவில்லை.
5 பவுன் நகை திருட்டு
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சரவணன் வீடு பூட்டிக்கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டி.வி. மற்றும் 5 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
வலைவீச்சு
மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து திருட்டு நடந்த வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.