கோதண்டராமர் கோவில் தேரோட்டம்

சிதம்பரம் கோதண்டராமர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Update: 2023-03-30 20:09 GMT

சிதம்பரம்:

சிதம்பரம் மேலவீதியில் பிரசி்த்தி பெற்ற ஸ்ரீகோதண்டராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவம் நிகழ்ச்சி கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேர்திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் கோதண்டராமர் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் 4 வீதிகள் வழியாக சென்று மீ்ண்டும் நிலையை அடைந்தது. இதையடுத்து கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) கோவிலில் புஷ்பயாகம், ஆஞ்சநேயர் உற்சவம், பட்டாபிஷேகம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்