கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா;இன்று நடக்கிறது

கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் கும்பாபிஷக விழா இன்று நடக்கிறது.

Update: 2023-04-25 21:41 GMT

கடத்தூர்

கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் கும்பாபிஷக விழா இன்று நடக்கிறது.

கொண்டத்து காளியம்மன் கோவில்

கோபி அருகே பாரியூரில் கொண்டத்து காளியம்மன் கோவில், சவுந்தரநாயகி உடனமர் அமரபணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில்களின் புனரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததை ெ்தாடர்ந்து கும்பாபிஷே விழா கடந்த 21-ந் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. 22-ந் கலசாபிஷேகமும், வாஸ்து சாந்தியும், 23-ந் தேதி யாக சாலையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், முதற்கால யாக பூஜையும், மகா தீபாராதனையும், நேற்று முன்தினம் காலையில் 2-ம் கால யாக பூஜையும், மாலையில் 3-ம் கால யாக பூஜையும், மகா தீபாராதனையும் நேற்று காலை 4-ம் கால யாக பூஜையும், மாலையில் 5-ம் கால யாக பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா

முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் நடக்கிறது. முன்னதாக காலை 8 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பின்னர் மதியம் 1 மணிக்கு கோமாதா பூஜையும், தசதானம், தச தரிசனம், மகா அபிஷேகம், மகா அலங்கார பூஜை நடைபெறுகிறது. மாலை 6 மணி அளவில் அம்மன் மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி கோவில் அருகே உள்ள பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்