2 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

நெமிலி தாலுகாவில் 2 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

Update: 2023-09-06 18:33 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில் உள்ள மேலபுலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கமலக்கண்ணன், துறையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தனஞ்செழியன் ஆகியோர் இந்த ஆண்டு நல்லாசிரியர் விருத்குக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இவர்கள் இருவருக்கும் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நல்லாசிரியர் விருது வழங்கினார். விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்