காளியம்மன் கோவிலில் தங்க தாலி திருட்டு
காளியம்மன் கோவிலில் தங்க தாலி திருட்டு போனது.
சேலம் செவ்வாய்பேட்டை ராமலிங்கம் தெருவில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நேற்று காலை பக்தர்கள் சிலர் வந்தனர். கோவிலின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரின் நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்தனர். கோவிலில் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க தாலி திருட்டு போய் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் தங்க தாலி திருடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.