11 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சையில் தனியார் வங்கி ஊழியர் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு 11 பவுன் நகைகள் திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-03 20:39 GMT

தஞ்சாவூர்;

தஞ்சையில் தனியார் வங்கி ஊழியர் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு 11 பவுன் நகைகள் திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் வங்கி ஊழியர்

தஞ்சை விளார் சாலை அருள் நகரை சேர்ந்தவர் ஆனந்த் எட்வின் (வயது 33). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று காலை இவர் வங்கிக்கு வேலைக்கு சென்று விட்டார். இவருடைய அம்மா கடைக்கு சென்று விட்டார்.மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்த ஆனந்த் எட்வின், வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன.

11 பவுன் நகை

மேலும் அதில் இருந்த தங்க சங்கிலி, டாலர், நெக்லஸ் உள்ளிட்ட 11 பவுன் நகைகளை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்