அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு நெல்லை மாவட்ட பா.ஜனதா வர்த்தக பிரிவு சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வர்த்தக அணி தலைவர் பாபு தாஸ் தலைமை தாங்கினார். வர்த்தக அணி மாநில தலைவர் ராஜ் கண்ணன் முன்னிலை வைத்தார். நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 19 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் மார்க்கெட் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இளைஞரணி சார்பில் நெல்லையில் ரத்ததான முகாம் நடந்தது. மாநில துணைத்தலைவர் நயினார் பாலாஜி தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட தலைவர் அசோகன், பொதுச்செயலாளர் நவீன்போஸ், மாவட்ட செயலாளர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பா.ஜனதா மாவட்ட தலைவர் தயாசங்கர் ஆகியோர் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தனர்.
நெல்லை மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் வேல் ஆறுமுகம், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினார்கள்.
நெல்லை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட பார்வையாளர் நீலமுரளி யாதவ் ஆகியோர் தங்க மோதிரம் அணிவித்தனர். பா.ஜ.க. தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் வீரமணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.