நகை- பணம் திருட்டு

பட்டுக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து நகை- பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-10-14 20:53 GMT

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் கிளாமங்களத்தான் தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவருடைய மனைவி பூங்கொடி (வயது49). பூங்கொடி கடந்த வாரம் தஞ்சையில் உள்ள தனது மகளை பார்க்க வீட்டை பூட்டிவிட்டு சென்றார். மீண்டும் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1¼ பவுன் நகைகள் மற்றும் வீட்டில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இது குறித்து பூங்கொடி பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

Tags:    

மேலும் செய்திகள்