காரியாபட்டி,
நரிக்குடி அருகே இருஞ்சிறை கிராமத்தில் மந்தையம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக முளைப்பாரியை எடுத்து வந்த பொதுமக்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளாக வலம் வந்தனர். அதன்பின்னர் கோவிலில் அருகே உள்ள குளத்தில் முளைப்பாரியை பொதுமக்கள் கரைத்தனர்.