கோபி ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.5 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் விற்பனை
கொப்பரை தேங்காய்
கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 151 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்த பட்ச விலையாக 76 ரூபாய் 25 காசுக்கும், அதிகபட்ச விலையாக 78 ரூபாய் 29 காசுக்கும் என மொத்தம் ரூ.5 லட்சத்து 8 ஆயிரத்து 102-க்கு ஏலம் போனது.