மாவட்டம் முழுவதும் 222 பயனாளிகளுக்கு ஆடுகள் - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-07-24 06:06 GMT

தமிழகத்தில் ஊரகப் பகுதியில் வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையில் செயல்படுத்தப்பட்ட உன்னத திட்டம் இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்.

திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை திருத்தணி வட்டாரத்தில் 78 பயனாளிகளுக்கும், பூந்தமல்லி வட்டாரத்தில் 75 பயனாளிகளுக்கும், புழல் வட்டாரத்தில் 35 பயனாளிகளுக்கும், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் 34 பயனாளிகளுக்கும் என மொத்தம் 222 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான வெள்ளாடுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. .

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்