மர்மமான முறையில் ஆடுகள் சாவு
விருதுநகரில் மர்மமான முறையில் ஆடுகள் இறந்தன.
விருதுநகர் கருப்பசாமி நகரில் வசிப்பவர் ராஜா (வயது49). இவரது வீட்டு முன்பு இவர் வளர்த்த 2 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதேபோன்று இவரது வீட்டு அருகில் வசிக்கும் பேச்சியம்மாள் என்பவரது வீட்டின் முன்பு அவரது 10 ஆடுகள் இறந்து கிடந்தன. மேலும் இவரது தங்கை வீட்டின் முன்பும் 5 ஆடுகள் இறந்து கிடந்தன. இவ்வாறு ஆடுகள் தொடர்ந்து மர்மமான முறையில் இறந்து கிடப்பதால் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ராஜா கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.