மர்ம விலங்கு கடித்து 12 ஆடுகள் பலி

நங்கவள்ளி அருகே மர்ம விலங்கு கடித்து 12 ஆடுகள் செத்தன

Update: 2023-03-14 20:09 GMT

மேச்சேரி

நங்கவள்ளி அருகே சாணாரப்பட்டி ஊராட்சி கந்துகாரன் வளவு கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இங்குள்ள விவசாயிகள் ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். கந்துகாரன் வளவை சேர்ந்த மாரியப்பன் (வயது 20), அதே பகுதியை சேர்ந்த சாந்தி ஆகியோர் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். நேற்று காலை அவர்கள் பட்டிக்கு வந்து பார்த்த போது மர்ம விலங்கு கடித்ததில் மாரியப்பன் என்பவரின் 9 ஆடுகளும், சாந்தி என்பவரின் 3 ஆடுகளும் என 12 செம்மறியாடுகள் மர்ம விலங்கு கடித்து குதறியதில் இறந்து கிடந்தன. அதிர்ச்சி அடைந்த அவர்கள், வருவாய், கால்நடை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.இதே பகுதியில் மர்ம விலங்கு தாக்கியதில் பல ஆடுகள் இறந்துள்ளன. மர்ம விலங்கை கண்டுபிடித்து வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்