ஆடு திருடியவர் கைது; 60 ஆடுகள் பறிமுதல்
ஆடு திருடியவர் கைது; 60 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் திருட்டு போயின. இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார்கள் குவிந்தன. இதேபோல் ஆலங்குடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர் ஆடு திருட்டு நடைபெற்று வந்தது. இதைதொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று கறம்பக்குடி சாலையில் வேகமாக சென்ற சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆடுகள் கடத்தி வரப்பட்டதும் அந்த ஆடுகள் அனைத்தும் கறம்பக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட ஆடுகள் எனவும் தெரியவந்தது. இதையடுத்து அந்த சரக்கு வேன் மற்றும் 60 ஆடுகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக செல்வராஜ் (வயது 40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் அறிந்த ஆடுகளை பறிகொடுத்தோர் கறம்பக்குடி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் புகார் மற்றும் விசாரணையின் அடிப்படையில் ஆடுகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.