ஆடு திருட்டு

ஆடு திருட்டு போனது.

Update: 2023-06-29 18:45 GMT

சிவகாசி, 

சிவகாசி தாலுகாவில் உள்ள ஈஞ்சார் மேலத்தெருவில் வசித்து வருபவர் மாரிமுத்து (வயது 42). விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஆடு காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி மாரிமுத்து காணாமல் போன ஆட்டை தேடினார். கிடைக்காத நிலையில் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஆட்டை திருடி சென்றது யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்