சின்னசேலத்தில் களைகட்டிய ஆட்டுச்சந்தை; 60 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ஆட்டுச்சந்தையில் இன்று விற்பனை களைகட்டியது.;

Update:2023-01-12 22:34 IST

கள்ளக்குறிச்சி,

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கால்நடை சந்தைகளில் விற்பனை சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ஆட்டுச்சந்தையில் இன்று விற்பனை களைகட்டியது.

இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வருகை தந்திருந்தனர். மொத்தம் 60 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை ஆன நிலையில், ஒவ்வொரு ஆடும் 7 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. பொங்கலை முன்னிட்டு விற்பனை களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்