சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோ பூஜை
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோ பூஜை நடந்தது.
சிதம்பரம்,
சிதம்பரத்தில் உள்ள உலகபுகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடி பவுர்ணமியையொட்டி கோ பூஜை நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளுக்கு கோ பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பசுமாடுகளில் கறந்த பால் மூலம் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உலக நன்மை வேண்டி நடைபெற்ற கோ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனார். பூஜைக்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பாஸ்கர் தீட்சிதர் செய்திருந்தார்.