சிறுமிகள் உள்பட 3 பேர் மாயம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுமிகள் உள்பட 3 பேர் மாயமானார். அவர்கள் கடத்தப்பட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-23 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுமிகள் உள்பட 3 பேர் மாயமானார். அவர்கள் கடத்தப்பட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்துள்ளார். கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மத்திகிரி அருகே ஜொனபெண்டா பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர் மத்திகிரி போலீசில் புகார் செய்தனர். அதில் ஓசூர் சானசந்திரத்தைச் சேர்ந்த சர்வேஷ் (25) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாலிபர் மீது புகார்

தளி அருகே உளள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 21-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் தளி போலீசில் புகார் செய்தனர். அதில் தம்மனட்டியை சேர்ந்த ராஜா (20) என்பவர் தங்களது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2 சிறுமிகள் உள்பட 3 பேரும் கடத்தப்பட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்