கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்
சுவாமியார்மடம் பகுதியில் 2 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் பிடித்தார்.;
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சுவாமியார்மடம் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு வயது 52. இவருடைய மனைவிக்கு 41 வயது ஆகிறது. இவர்களுக்கு 21 வயதில் மகனும், 15 வயதில் மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று ஓய்வு பெற்ற தொழில் பாதுகாப்பு படை வீரரின் மனைவி, கணவர் மற்றும் 2 பிள்ளைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடி விட்டார்.
இதனை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருவட்டார் போலீஸ் நிலையத்தில் கணவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருமணத்திற்கு முன்பே அந்த பெண்ணுக்கும், கள்ளக்காதலனுக்கும் பழக்கம் இருந்துள்ளது. பின்னர் திருமணம் முடிந்த பிறகும் தொடர்பு இருந்துள்ளது. பிள்ளைகள் வளர்ந்த பிறகும் பெண்ணால் கள்ளக்காதலனை மறக்க முடியவில்லை. இதனால் கள்ளக்காதலனுடன் அவர் ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.