பெண் மர்ம சாவு

பெண் மர்மமான முறையில் இறந்தார்.

Update: 2023-08-19 19:02 GMT

கரூர் மாவட்டம் குளித்தலை அருேக உள்ள சிவாயம் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகள் ஷாலினி. இவருக்கும் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருேக உள்ள கொளக்குடி மெயின் ரோட்டை சேர்ந்த ராஜ்- சம்பூர்ணம் தம்பதியின் மகன் ஆனந்தகுமார் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மேகாஸ்ரீ, காஸ்மீதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாலினிக்கும், அவரது மாமியார் சம்பூர்ணத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை குடும்பத்தினர் சமாதானம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஆனந்தகுமார் ஷாலினியின் தாய் அமுதாவுக்கு போன் செய்து உங்களது மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார். இதனால் விரைந்து வந்த அமுதா மகள் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

இது குறித்து அமுதா தொட்டியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக ஆனந்தகுமார், அவரது தாயார் சம்பூர்ணம் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்