இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருத்தணியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சிகிச்சை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-08-26 08:10 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பி.டி.புதூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் தனது சகோதரியின் மகள் வேதவள்ளி (வயது 19) என்பவரை சிறுவயதில் இருந்தே தனது வீட்டில் வளர்த்து படிக்க வைத்து வந்தார்.

இந்த நிலையில் வேதவள்ளி திருமணத்திற்கு உறவினர் மாப்பிள்ளையை பார்த்ததாக கூறப்படுகிறது. அதற்கு வேதவள்ளி மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை என்றும், சிறிது காலம் கழித்து திருமணம் செய்து கொள்வதாக மோகனிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி வீட்டில் உள்ள குளியலறையில் வேதவள்ளி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வேதவள்ளியை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று முன்தினம் வேதவள்ளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த வேதவள்ளி சிறுவயதிலே தாய், தந்தையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்