பள்ளி மாணவிகளுக்கு பரிசு
சாயல்குடியில் போட்டியில் வென்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சாயல்குடி,
சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாயல்குடி பேரூராட்சி சார்பில் புகையில்லா பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாயல்குடி பேரூராட்சி செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். துணைச்சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றார். கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டி மற்றும் நாடகப் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சாயல்குடி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.