ஆண் நண்பருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக தன் பேச்சை கேட்காமல் சினிமா வாய்ப்புதேடி சென்னைக்கு புறப்பட்டதால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக டிக்-டாக் பிரபலத்தின் கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஆண் நண்பருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக தன் பேச்சை கேட்காமல் சினிமா வாய்ப்புதேடி சென்னைக்கு புறப்பட்டதால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக டிக்-டாக் பிரபலத்தின் கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2022-11-08 12:31 GMT

வீரபாண்டி

ஆண் நண்பருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக தன் பேச்சை கேட்காமல் சினிமா வாய்ப்புதேடி சென்னைக்கு புறப்பட்டதால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக டிக்-டாக் பிரபலத்தின் கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டிக்-டாக் பிரபலம்

திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 38). தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சித்ரா அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணம் முடிந்து விட்டது. சமூக வலைதளமான டிக்-டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டவராக சித்ரா இருந்தார். மனைவியின் செயல்பாடு, சமூக வலைத்தளங்களில் அவர் பதிவேற்றம் செய்த நடனம், ஆண் நண்பருடன் சென்னை சென்று அங்கு தங்கி நடிக்க வாய்ப்பு தேடியதை பிடிக்காத கணவர் அமிர்த லிங்கம், அவரை கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக போலீசில் அமித்தலிங்கம் கொடுத்த வாக்குமூலும் வருமாறு:-

சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை

என் மனைவி சித்ரா கடந்த 3 ஆண்டுகளாக இணையதளத்தில் வீடியோ பதிவிடுவதை அதிக ஆர்வத்துடன் செய்து வந்தார். ஆரம்பத்தில் இருந்து இவ்வாறு வீடியோ பதிவிடுவது எனக்கு பிடிக்கவில்லை. இது குறித்து பல முறை மனைவியிடம் எடு்த்துக்கூறி இது நமக்கு வேண்டாம், விட்டுவிடு என்று அறிவுரை கூறினேன். ஆனால் அவளுடைய ஆட்டத்திற்கு பலர் விருப்பம் தெரிவித்தால் அவள் தொடர்ந்து புதிய புதிய வீடியோவை பதிவேற்றம் செய்தாள். இதனால் அவளுக்கு சென்னையில் உள்ள ஒரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டது.அவர் சித்ராவை சினிமாவில் சேர்த்து விடுவதாக கூறினார். அந்த பழக்கத்தில் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை செல்வதாக கூறினார். நாங்கள் வேண்டாம் என்றோம். ஆனால் எங்களையும் மீறி சென்னைக்கு சென்றாள். இதனால் எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக வீட்டாரின் எதிர்ப்பை மீறி சென்னை சென்று சில மாத காலங்கள் தங்கினாள். மகள்களின் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு தன்னுடன் இருக்குமாறு பலமுறை அறிவுறுத்தினேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தி சென்னையில் இருந்து திருப்பூர் வரவழைத்தேன். அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை செல்வதாக என்னிடம் தெரிவித்தார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இதனால் மீண்டும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஆனால் சென்னையில் இருந்து எனது மனைவியின் செல்போனுக்கு வா.. வா... என்று தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது.

கழுத்ைத நெரித்து கொன்றேன்

இதையடுத்து சென்னை செல்லப்போவதாக கடந்த 6-ந் தேதி சித்ரா என்னிடம் கூறிளாள். நான் வேண்டாம் என்றேன். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சித்ராவை தன்னுடன் இருக்க வைக்க வேண்டும் என்பதற்காகவும், அவளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவும் கடுமையான வார்த்தைகளால் திட்டினேன். அப்போதுஅவள் என்னை தாக்க முயற்சி செய்தார். அதனால் தான் ஆத்திரம் தாங்க முடியாமல் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

இவ்வாறு அமிர்தலிங்கம் வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

-------------------------

கொலையான சித்ரா

Tags:    

மேலும் செய்திகள்