#லைவ் அப்டேட்ஸ்: பதற்றம்... கோஷம்... பாதியில் வெளியேற்றம்...? அ.தி.மு.க பொதுக்குழு வெற்றியா...! தோல்வியா...! - முழு விவரம்
தனது இல்லத்தில் இருந்து பொதுக்குழு நடக்கு வானகரத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். வழிநெடுகிலும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
பொதுக்குழுவுக்கு புறப்பட்டார் ஒ.பன்னீர் செல்வம்
சென்னை, பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லதில் இருந்து பொதுக்குழு நடக்கும் வானகரத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னிர் செல்வம் புறப்பட்டார்.
பொதுக்குழு கூட்டத்திற்கு செல்ல இல்லத்திலிருந்து புறப்பட உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட உள்ளது.
நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல் 100 சதவீதம் கடைபிடிக்கப்படும் என்றும் நீதிமன்ற தீர்ப்பினால் எந்தவித பின்னடைவும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
“நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அதிமுக பொதுக்குழு நடைபெறும்” - முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்
அதிமுக பொதுக்குழு, கூட்டம் அமைதியான முறையில் நடைபெறும் - முன்னாள் அமைச்சர் செம்மலை
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்றும் நீதிமன்ற மேல்முறையீட்டு தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம்; அதிமுகவிற்கு பின்னடைவு என்பதே கிடையாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு கூட்டம்: அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வருகை
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரம் மண்டபத்திற்கு அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் வருகை தருகின்றனர். ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று இருதரப்பாக இருப்பதாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காத வண்ணம் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு வரலாறு காணாத வகையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அடையாள அட்டைகளுடன் வரும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டும் கூட்டத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
இதற்காக பொதுக்குழு உறுப்பினர்களின் புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த அடையாள அட்டைகளில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படங்கள் இடம் பெற்றுள்ளது. பொதுக்குழு நடக்கும் இடத்திற்குள் கட்சி நிர்வாகிகளின் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. முக்கிய நிர்வாகிகளின் வாகனங்கள் மட்டுமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.
பொதுச்செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி?
இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்குவதற்கும், மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கும் வகையில் அ.தி.மு.க. சட்டவிதிகளை மாற்றுவதற்குமான சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. .
பொதுச்செயலாளராக ஏகமனதாக பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட இருக்கிறார். அதனைத்தொடர்ந்து மேகதாது எதிர்ப்பு உள்பட 23 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கிறது என்றும் வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .