பொதுக்குழு விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தள்ளுபடி

பொதுக்குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2022-07-07 07:45 GMT

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்த பொதுக்குழுவில், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த பொதுக்குழு வரும் ஜூலை 11ல் நடைபெறும் என தமிழ்மகன் உசேன் தெரிவித்தார்.

தீர்மானங்களை நிராகரித்தது மற்றும் அவைத்தலைவர் தேர்வு உள்ளிட்டவை கோர்ட்டை அவமதிக்கும் செயல் என ஓபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டியது. இந்த நிலையில், இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதாக கூறி தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு

Tags:    

மேலும் செய்திகள்