காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு
பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
பாவூர்சத்திரம்:
மதுரை நாடார் மகாஜன சங்க தேர்தலையொட்டி வாக்காளர்களை சந்திக்க பாவூர்சத்திரம் வருகை தந்த சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர், பாவூர்சத்திரத்தில் தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், செயலாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசினர். பின்னர் அனைவரும் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.