பகத்சிங் உருவ படத்துக்கு மாலை அணிவிப்பு
வடமதுரையில் பார்வர்டு பிளாக் பசும்பொன் கட்சியின் சார்பில் பகத்சிங் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வடமதுரையில், அகில இந்திய பார்வர்டு பிளாக் பசும்பொன் கட்சியின் இளைஞரணி சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டித்தேவர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி அவர்களது உருவ படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் நேதாஜி மணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் மாவட்ட தலைவர் சென்னை ராஜா மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் சே.ரஞ்சித்போஸ் ஆகியோர் கலந்துகொண்டு கட்சிக்கொடியை ஏற்றினர். இதில் வடமதுரை அமைப்புச் செயலாளர் வினித், சாணார்பட்டி அமைப்பு செயலாளர் பசும்பொன் சிவா மற்றும் நிர்வாகிகள் சூர்யா, அருண், கலை, ராஜபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.