பெருஞ்சித்திரனார் படத்துக்கு மாலை அணிவிப்பு
நெல்லையில் பெருஞ்சித்திரனார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் 90-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை அருகே சிவந்திப்பட்டியில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துபாண்டி, மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், தமிழ்தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேரன்துரை, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் வீரபாண்டி, முத்துவளவன், சுப்பையா, விஜய் அருண், முத்துகுமார், ஸ்டீபன், சாந்தகுமார், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.