வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பூந்தோட்டம் அமைப்பு

வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பூந்தோட்டம் அமைக்கப்பட்டது.

Update: 2022-10-10 18:51 GMT

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ெரயில் நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் தனியார் அமைப்பினர் சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமை தாங்கினாா். இதில் 200-க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பூச்செடிகள் நடவு செய்யப்பட்டு பூந்தோட்டம் அமைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு 100 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, ஆசிரியர் அமைப்பை சேர்ந்த சத்தியமூர்த்தி, வடிவேல், தனியார் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வடிவேல், சேது உள்பட தனியார் அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்